நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகி கடந்த 2024 ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா 2 திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாகமான வசூல் செய்துள்ளது.
இத் திரைப்படத்தில் பகத் பாசில், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
மேலும் இத் திரைப்படம் 2026 ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஜப்பான் நாட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இத் திரைப்படத்தின் ஜப்பானிய மொழி Trailer நேற்று வெளியாகியுள்ளது.