S.S.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ராவும், வில்லனாக பிரித்விராஜும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தின் Title வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இத்திரைப்படத்திற்கு 'வாரணாசி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்தது.
இதில் 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக Teaserஇல் காளை ஒன்றின் மீது மகேஷ் பாபு, கையில் திரிசூலத்தை ஏந்தி வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே 'மந்தாகினி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் FirstLookஐ திரைப்படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு பேசுகையில் தனது மறைந்த தந்தை நடிகர் கிருஷ்ணாவை நினைவு கூர்ந்தார்.புராணப் படங்களில் நடிக்க வேண்டும் என எனது தந்தை விரும்பியிருந்தார்.இந்தப் படத்தைப் பார்த்து தனது தந்தை பெருமைப்படுவார் என நம்புகிறேன் என குறிப்பிட்டார்.