கட்டார், டோஹா வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியிடம் 3 விக்கெட்டுகளால் இலங்கை ஏ அணி தோல்வியடைந்தது.
விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணிசார்பாக மிலன் ரத்நாயக்க 41, நுவனிது பெர்னாண்டோ 39, அணித் தலைவர் துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பந்துவீச்சில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.