நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்வெளி வீரர்களை அனுப்பும் நாசாவின் திட்டங்கள் ஒருபுறம் இருக்க, அங்கு எதிர்காலக் குடியிருப்புகளை அமைக்கும் யோசனைகளையும் விஞ்ஞானிகள் வைத்துள்ளனர்.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA), நிலவு மற்றும் செவ்வாய்க்கு செல்லும் நீண்ட கால விண்வெளிப் பயணங்களை சமாளிக்க, HOBI-WAN என்ற பெயரில் ஒரு புதுமையான உணவுத் தயாரிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
குறைந்த வளங்களைக் கொண்டு விண்வெளி வீரர்கள் உயிர்வாழ வேண்டுமானால், புதுமையான, நிலையான தீர்வுகள் தேவை.
இந்தத் திட்டத்தின் அடிப்படைத் தொழில்நுட்பத்தை பின்லாந்தின் சோலார் ஃபுட்ஸ் (Solar Foods) நிறுவனம் உருவாக்கியுள்ளது.
வாயு நொதித்தல் (Gas Fermentation) என்ற செயல்முறை மூலம், மைக்ரோப்களை (நுண்ணுயிரிகளை) வளர்க்க, காற்றில் உள்ள கார்பன் டை ஒக்சைடு பயன்படுத்தப்படுகிறது.
இதற்குத் தேவையான ஆற்றல் மின்சாரத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 'காற்றிலிருந்து' சத்தான, பல்துறை வாய்ந்த புரதத் தூளை (Powdered Protein) உருவாக்க முடியும் என்பதை சோலார் ஃபுட்ஸ் பூமியில் நிரூபித்துள்ளது.
இப்போது, இந்தத் திட்டத்தை விண்வெளியில் சோதிக்க குறித்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.