தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பவிஷ். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் பவிஷ், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குநர் லக்ஷ்மணிடம் ‘போகன்’ மற்றும் ‘பூமி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
தினேஷ் மற்றும் G.தனஞ்ஜெயன் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் நாக துர்கா கதாநாயகியாக நடிக்கிறார். காதல் கலந்த கமர்ஷியல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.
இந்நிலையில், இத்திரைப்படத்தின் Title வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ’லவ் ஓ லவ்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதனை நடிகரும், இசையமைப்பாளருமான G.V. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.