விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள திரைப்படம் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி). இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சீமானும், S.J.சூர்யாவும் நடித்துள்ளனர்.
நயன்தாரா மற்றும் 7 Screen Studio இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 18ஆம் திகதி இத்திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில்,'LIK' திரைப்படத்தின் 2ஆவது பாடல் “பட்டுமா” இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. இதுதொடர்பாக Poster ஒன்றை வெளியிட்டு திரைப்படக்குழு முன்னதாகவே தெரிவித்து இருந்த நிலையில், தற்போது Promo வை வெளியிட்டுள்ளனர்.
அனிருத் இசையில் உருவாகி உள்ள “பட்டுமா” பாடல் வரிகளை திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பதால் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.