மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47ஆவது திரைப்படத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தில், நஸ்லேன் மற்றும் நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில், நடிகை நஸ்ரியா இத்திரைப்படம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில், 'ஜித்து மாதவன் இயக்கும் 'சூர்யா47' திரைப்படத்தின் கதைக்களம் மிகவும் புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது. பார்வையாளர்களுக்கு இது ஒரு சிறப்பான விருந்தாக அமையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நடிகர் சூர்யாவுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் உற்சாகமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
'சூர்யா47' திரைப்படத்தில் நடிகர் சூர்யா எந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.