ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான 'அவதார்' திரைப்படத்தின் முதல் பாகம் 2009 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
அதன் தொடர்ச்சியாக 'Avatar: The Way of Water' திரைப்படம் அதிக வசூல் செய்தது. தற்போது, 'Avatar: Fire and Ash' என்ற பெயரில் மூன்றாம் பாகம் நெருப்பின் பின்னணியில் உருவாகி, டிசம்பர் 19 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் அவதார் 3 ஆம் பாகத்திற்காக முன்பதிவு தொடங்கிவிட்டது. இதுவரை நடந்த முன்பதிவில் உலகளவில் இத்திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.