பிரபல இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் 17ஆம் திகதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘டியூட்’.
இத்திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதையடுத்து 'Dude' திரைப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய தனது கறுத்த மச்சான் பாடலை நீக்கக்கோரி இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதேவேளை இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இளையராஜா தரப்பு, "அனுமதியின்றி பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனது பாடலை உருமாற்றி உள்ளனர். பாடலுக்கான உரிமை எங்களிடம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம், உத்தரவை திகதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.