மலையாள சினிமாவின் மூத்த நடிகரான மம்முட்டியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'களம் காவல்'. Crime Thriller கதைக்களத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தத் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் மம்முட்டி புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த திரைப்படத்தினை 'அனுராக கரிக்கின் வெள்ளம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கலித் ரகுமான் இயக்க உள்ளார். இவர் 'உண்டா' , 'லவ்', 'தள்ளுமலா' போன்ற திரைப்படங்களை இயக்கி மலையாளத் திரைத்துறையில் ஹிட் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,இயக்குநர் கலித் ரகுமான் இயக்கத்தில் தனது அடுத்த திரைப்படம் உருவாகவுள்ளதாக நடிகர் மம்முட்டி தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த கூட்டணி 'உண்டா' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருப்பது, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.