உலகப் புகழ்பெற்ற Hollywood இயக்குநர் Steven Spielberg நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் Science Fiction புனைகதை பக்கம் திரும்பியுள்ளார்.
1982இல் இவர் வேற்றுகிரகவாசிகள் பற்றி இயக்கிய 'E.T. the Extra-Terrestrial' திரைப்படம் உலகப் பிரசித்தம் பெற்றதை தொடர்ந்து இவர் 'Jurassic Park' உட்பட பல்வேறு கதைக்களங்களில் பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கினார்.
79 வயதாகும் Spielberg ,தற்போது 'Disclosure Day' என்ற வேற்றுகிரகவாசிகள் பற்றிய Sci -Fic திரைப்படத்தை இயக்கியுள்ளார்.தற்போது 'Disclosure Day' திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இத்திரைப்படம் 2026ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.