இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் 'Train' திரைப்படம் உருவாகி வருகிறது.இந்தத் திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கலைப்புலி S.தாணு தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், 'Train' திரைப்படத்தின் முதல் பாடலான "கன்னக்குழிக்காரா..." இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளது. கபிலனின் பாடல் வரிகளில் மிஷ்கின் இசையமைத்துள்ள இப்பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இதனால் இரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.