நடிகர் சிவகார்த்திகேயன் பயணம் செய்த கார் சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நேற்று விபத்திற்குள்ளானது.
முன்னால் சென்ற இன்னுமொரு வாகனத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் கார் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்றதையடுத்து குறித்த பகுதியில் இரு தரப்புக்குமிடையில் வாய்த்தர்க்கத்தின் மூலம் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினர் தலையிட்டு நிலமையை சீர் செய்தனர்.
ஆனாலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கோ மோதிய மற்ற வாகனத்தில் பயணம் செய்தவருக்கோ எந்த வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
சிவகார்த்திகேயன் தன்னுடைய 25 ஆவது திரைப்படமான "பராசக்தி” திரைப்படத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில், இத்திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் தைப்பொங்கல் விருந்தாக நடிகர் விஜய் நடிக்கும் “ஜனநாயகன்” திரைப்படத்துடன் போட்டியிட வெளிவர உள்ளது.