'ரஜினி முருகன்', 'சீமராஜா', மற்றும் 'MGR மகன்' போன்ற திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் தற்போது 'கொம்புசீவி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் Glimpse Video, முதல் பாடல் வெளியானது. இந்நிலையில், 'கொம்புசீவி' திரைப்படத்தின் ''வஸ்தாரா'' பாடல் வெளியாகி உள்ளது.சூப்பர் சுப்பு வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை விஷ்ணு பிரியாவுடன் இணைந்து யுவனும் பாடியுள்ளார்.