யாரு இந்த வாசு? யாரு சிவா? இப்படி நீங்க கேட்கிறது புரிகிறது. இதுவரைக்கும் வாசுவும், சிவாவும் யாரு என்று தெரியவில்லை, ஆனால் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்பது மட்டும் உறுதி.
ஓகே விஷயத்திற்கு வருவோம்.
'பாஸ் என்கிற பாஸ்கரன்;' என்னும் வெற்றித்திரைப்படத்தின் இயக்குனர் தான் ராஜேஸ். ஆர்யா, சந்தானம், ராஜேஸ் இணைந்த இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையும் திரைப்படம் தான் 'வாசுவும் சிவாவும் ஒன்னா படிச்சவங்க' (V.S.O.P). இந்த படத்தின் கதாநாயகி தமன்னா என அறிவிக்கப்பட்டுள்ளது. டி. இமான் இசையமைக்கிறார் என்பதும் தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்.
'பாஸ் என்கிற பாஸ்கரன்;' என்னும் வெற்றித்திரைப்படத்தின் பின் ராஜேஸ் இயக்கிய, 'ஆல் இன் ஆல் அழகுராஜா' திரைப்படம் தோல்வியடைந்தது. எனவே வெற்றிக் கூட்டணியை வைத்து வெற்றித் திரைப்படம் ஒன்றை உடனடியாக வெளியிட வேண்டும் என்பதே ராஜேஸின் திட்டம். 'வாசுவும் சிவாவும் ஒன்னா படிச்சவங்க' எனும் இப்புதிய படத்தை ஆர்யா தயாரிக்கிறார் என்று சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படபிடிப்புகள் சென்னையில் நடைப்பெற்று வருகின்றன. கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகைச்சுவை நிரம்பிய ஒரு திரைப்படமாக இது இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
- ர.பிரவீனா