Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
தாய்மைக்கு முன்னுரிமை கொடுத்த செனட்டர்! இணையத்தில் வைரலாகும் காணொளி

SOORIYAN GOSSIP - தாய்மைக்கு முன்னுரிமை கொடுத்த செனட்டர்! இணையத்தில் வைரலாகும் காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

67 Views
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தனது ஆறு மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு உரையாற்றிய செனட்டர் பாத்திமா பேமனின் செயல் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன செனட்டரான அவர், தனது மகள் அலியாவை (Aliyah) கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியுள்ளார்.

 

இதன்போது, அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு செனட்டரான லிடியா தோர்ப், குழந்தையுடன் விளையாடி மகிழ்வித்துள்ளார். இணையப் பாதுகாப்பு தொடர்பான Digital Duty of Care Bill 2026 சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோதே இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குழந்தைகளைப் பராமரிப்பதற்கும், தேவையான சந்தர்ப்பங்களில் பாலூட்டுவதற்கும் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற விதிகள் அனுமதி வழங்குகின்றன. நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துக்கொண்டிருக்கும்போதே குழந்தையைப் பெற்றெடுத்த மேற்கு அவுஸ்திரேலியாவின் முதல் செனட்டர் என்ற சிறப்பையும் பாத்திமா பேமன் பெற்றுள்ளார். தாய்மைப் பொறுப்புகளையும் தொழில்சார் கடமைகளையும் ஒருங்கிணைக்கும் பெண்களுக்கு ஆதரவான பணிச்சூழலின் அவசியத்தையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top