இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆச்சி ஆச்சி’ வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படம் 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.