Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
‘மகாராஜா’ திரைப்படத்தைப் பாராட்டிய ஹொலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்!

SOORIYAN GOSSIP - ‘மகாராஜா’ திரைப்படத்தைப் பாராட்டிய ஹொலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

72 Views

தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான ‘மகாராஜா’ திரைப்படத்தைப் பார்த்த ஹொலிவுட் பிரபல நடிகர் டாம் ஹாங்க்ஸ், படத்தில் நடித்த இளம் நடிகை சச்சனா நமிதாஸின் நடிப்பைப் பாராட்டியுள்ளார். நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம், இந்தியாவைத் தாண்டியும் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், அதன் விறுவிறுப்பான திரைக்கதையும் நடிகர்களின் நடிப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

 


 

சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினரான கவிதா குப்தா இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் டாம் ஹாங்க்ஸைச் சந்தித்தபோது, அவர் பார்க்க வேண்டிய இந்தியத் திரைப்படங்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டதாகவும், அப்போது ‘மகாராஜா’ திரைப்படத்தையும் பரிந்துரைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் மீண்டும் சந்தித்தபோது, இத்திரைப்படத்தில் நடித்த சச்சனா நமிதாஸின் நடிப்பு தன்னை வெகுவாகப் பாதித்ததாக டாம் ஹாங்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ‘மகாராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருவதுடன், அத்திரைப்படத்தை ஹொலிவுட்டில் மறுஉருவாக்கம் செய்வதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஹொலிவுட் மறுஉருவாக்கத்தில் தமக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால் நடிக்க விரும்புவதாக விஜய் சேதுபதி ஏற்கனவே தெரிவித்துள்ளார். எனினும், மறுஉருவாக்கத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top