Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
அவதார் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வெளியாகப்போகும் அடுத்தடுத்த பாகங்கள்.

SOORIYAN GOSSIP - அவதார் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வெளியாகப்போகும் அடுத்தடுத்த பாகங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற Avatar திரைப்படத் தொடரின் அடுத்தடுத்த பாகங்கள் தொடர்பில் டிஸ்னி நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, Avatar 4 திரைப்படம் 2029ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதியும், Avatar 5 திரைப்படம் 2031ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதியும் உலகளாவிய திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற டிஸ்னி நிறுவன நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு வெளியான முதல் Avatar திரைப்படம் முதல், அதன் தொடர்ச்சியாக வெளியான Avatar: The Way of Water மற்றும் Avatar: Fire and Ash ஆகிய திரைப்படங்கள் வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், நவீனத் தொழில்நுட்பம் மற்றும் பண்டோரா உலகின் கற்பனைச் சூழல் ஆகியவை இந்தத் திரைப்படத் தொடரின் தனித்துவமாகக் கருதப்படுகின்றன. முதல் மூன்று திரைப்படங்களும் இணைந்து உலகளாவிய திரையரங்க வசூலில் சுமார் 6.75 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அடுத்தடுத்த பாகங்களின் தயாரிப்புச் செலவுகள் மற்றும் வெளியீடு தொடர்பான நிச்சயமற்ற நிலை காரணமாக, தொடரின் எதிர்காலம் குறித்து முன்னதாகக் கேள்விகள் எழுந்திருந்தன. இந்நிலையில், Avatar 4 மற்றும் Avatar 5 திரைப்படங்களுக்கான வெளியீட்டுத் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளமை இரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு திரைப்படங்களின் கதைக்களம் மற்றும் மேலதிக தயாரிப்பு விபரங்கள் தொடர்பில் மேலும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top