63 Views
27 வயதான Jennifer Barreto, திருமணமானவர் என்பதுடன் ஒரு பெண் குழந்தையின் தாயும் ஆவார். உளவியல் மற்றும் சமூகப் பணித்துறைகளில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், சமூக நலன் மற்றும் மனநல விழிப்புணர்வு தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். திருமணமான பெண்களும் தாய்மார்களும் பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட பின்னர், இப்பட்டத்தை வென்ற முதல் பெண் என்ற வரலாற்றுச் சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.
இவரது வெற்றியைத் தொடர்ந்து, சொந்த ஊரான சான் செபாஸ்டியனில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மீண்டும் பிரபஞ்ச அழகிப் பட்டம் கிடைத்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகிப் போட்டியில் மட்டுமன்றி, தனது கல்வி மற்றும் சமூகப் பணிகள் மூலமாகவும் கவனம் பெற்றுள்ள Jennifer Barreto, தற்போது சர்வதேச அளவில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.