44 Views
குறிப்பாக, மாணவர்களுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தபோதும், அவர்களின் அன்பான செயல்களுக்கு விஜய் எதிர்வினையாற்றியபோதும் பதிவான காட்சிகள் இரசிகர்களைக் கவர்ந்துள்ளன. திரையில் அதிரடி நாயகனாகத் தோன்றும் விஜய்யின் இத்தகைய இயல்பான தருணங்கள் தற்போது இரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளன.
கல்வி விருது விழாவில் இடம்பெற்ற இந்தச் சிறிய தருணங்கள் அடங்கிய காணொளிகள் மீண்டும் கவனம் பெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் குட்டிக் குட்டி Reaction இரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடிய இந்தத் தருணங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.