தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசாங்கம், தனது முதல் 200 நாட்களில் 18.7 பில்லியன் அமெரிக்க டொலர் (US$18.7 billion) பெறுமதியான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25ஆம் திகதி சென்னைக்கு அருகிலுள்ள கோவளத்தில் நடைபெற்ற இரண்டாவது VETTRI தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில், 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம் 58,214 கோடி இந்திய ரூபாய் முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதுடன், 25 மாவட்டங்களில் 65,786 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகன உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணுவியல், குறைக்கடத்தி தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இவை முதலீட்டு உறுதிமொழிகளே தவிர, முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முதலீடுகள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.