தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் மாணவர்களுக்குக் கல்வி விருதுகள் வழங்கிய நிகழ்வில் இடம்பெற்ற சுவாரஸ்யமான தருணம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மாணவர்களுடன் விஜய் புகைப்படங்களை எடுத்துக்கொண்ட போது சிறுவன் ஒருவன் அவருக்கு கை அசைவு தொடர்பான செய்கையைச் சொல்லிக் கொடுக்கும் காட்சி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாகத் திரையில் தனது நடிப்பால் இரசிகர்களைக் கவரும் விஜய்க்கே, ஒரு சிறுவன் நடிப்பைச் சொல்லிக் கொடுப்பது போன்ற இந்தக் காட்சி பலரையும் இரசிக்க வைத்துள்ளது. சிறுவனின் குறும்புத்தனமும், விஜய்யின் சிரிப்பும் குறித்த தருணத்தை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளன.
மாணவர்களின் கல்விச் சாதனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வில், இவ்வாறான எதிர்பாராத சின்னச் சின்ன தருணங்களும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகின்றன.