தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவான ‘மயக்கம் என்ன’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் தனுஷுடன் ரிச்சா கங்கோபாத்யாய் நடித்திருந்தார். காதல், கனவு, தோல்வி, வாழ்க்கைப் போராட்டம் என இளைஞர்களின் உணர்வுகளைக் கதைக்களமாகக் கொண்ட இப்படம், தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்பாகப் பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் புகைப்படக் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் இளைஞனாக தனுஷ் வெளிப்படுத்திய நடிப்பு இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. செல்வராகவனின் யதார்த்தமான இயக்கமும், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும் படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தின. குறிப்பாக, படத்தின் பாடல்கள் இன்றளவும் இரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன.
திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், அதன் காட்சிகளும் பாடல்களும் இரசிகர்களின் நினைவுகளில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளன. காலம் கடந்தும் பேசப்படும் இப்படத்தின் ஆண்டு நிறைவு, தனுஷ் இரசிகர்கள் மத்தியில் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது. இன்றைய தலைமுறை ரசிகர்களும் இப்படத்தை நினைவுகூர்வது, 'மயக்கம் என்ன'
திரைப்படத்தின் மீதான வரவேற்பை வெளிப்படுத்துகிறது.