83 Views
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், “தவெக M .L .A அருள் விக்னேஷ் மீது FIR போடாமல் 116 நாட்களாக இந்த டம்மி முதலமைச்சர் தூங்கிக்கொண்டு இருந்தாரா? எனக் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அவரது இந்தக் கருத்து, தமிழக அரசியல் சூழலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருள் விக்னேஷ் தொடர்பான விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது, புகார் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்ன என்பவை குறித்த மேலதிக தகவல்கள் வெளியாக வேண்டியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கேள்வியைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கங்களும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. அத்தோடு தற்போது தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன .