இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. இப்படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகை மாளவிகா மோகனன் ஆரம்பித்துள்ளார். டப்பிங் அனுபவம் இம்முறை மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவும் விஜய் சேதுபதியும் மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2027ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் திகதி பொங்கல் வெளியீடாக உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது