மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டே அலுவலக வேலைகளைச் செய்வது, ஒரு அலுவலக கூட்டத்தில் இருக்கும்போதே குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிப்பது, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவது என பலரும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதாக நினைக்கிறோம்.
ஆனால், உண்மையில் நாம் செய்வது பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வது அல்ல. ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறி மாறி செயல்படுவதுதான் என்கிறார்கள் நிபுணர்கள். அத்துடன், இவ்வாறு செய்வது மூளையின் ஆற்றலைக் குறைப்பதுடன் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கலாம் என்கிறார்கள்.
இவற்றைக் குறைக்க முக்கியமான வேலைகளை முதலில் பட்டியலிட்டு, ஒவ்வொன்றாகச் செய்யுங்கள், அதே நேரம் வேலை செய்யும்போது தேவையற்ற அறிவிப்புகளையும் சத்தங்களையும் தவிர்த்துவிடுங்கள்.