வெள்ளை அரிசியில் Glycemic Index அதிகம் என்பதால், இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்தும். தொடர்ந்து அதிக அளவில் சோறு சாப்பிடுவது இன்சுலின் எதிர்ப்புத் தன்மைக்கும் இரண்டாம் நிலை நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும்.
அரிசியில் Carbohydrates மற்றும் கலோரிகள் அதிகம் காணப்படுவதால் உடலுழைப்பு குறைவாக இருந்து, சோற்றை அதிகமாகச் சாப்பிடும்போது, அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக மாறி உடல் எடை மற்றும் தொப்பை அதிகரிக்கக் காரணமாகிறது.
தட்டில் அதிக இடத்தைச் சோறு பிடித்துக்கொள்ளும்போது, காய்கறிகள், கீரைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடும் அளவு குறைந்துவிடும். இதனால் உடலுக்குத் தேவையான vitamins, தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
நெற்பயிர்கள், மண் மற்றும் நீரிலிருந்து இயற்கையாகவே சிறிதளவு தனிமத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. தினமும் மிக அதிக அளவில் அரிசி உணவுகளை மட்டுமே உண்பவர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் இதன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.