1,471 Views
நாளை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளது.
இத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 3 பேர் போட்டியிடுகின்றனர். இதில் உமா குமரன் என்ற தமிழ் பெண் ஹரோ பகுதியில்போட்டியிடுகிறார்.
இதேபோல் கேம்பிரிஜில் சமலி பெர்ணாண்டோ என்ற பெண்ணும் , ஹெம்சயரில் ரணில் ஜயவர்தன என்பவரும் போட்டிடுகின்றனர்.
இந்நிலையில் ரணில் ஜயவர்தனவை துப்பாக்கியால் சுடப்போவதாக தெரிவித்த ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் போட்டியாளரொருவர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
ரொபேர்ட் பிளே என்பவரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.
ரணில் ஜயவர்தன பிரதமரானால் அவரை சுடப்போவதாகவும் , அவர் முழுமையான பிரித்தானியர் அல்லவெனவும் விமர்சித்துள்ளார்.
ரொபேர்ட் பிளே, ரணிலை திட்டும் காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.