2026 மகளிர் T20 உலகக் கிண்ணத்துக்கான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, மகளிர் T20 உலகக் கிண்ணத்துக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.73 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
Champion பட்டம் வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.19.42 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.9.71 கோடியும் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா ரூ.5.60 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் T20 உலகக் கிண்ணத்துக்கு இந்த முறை வழங்கப்படும் பரிசுத் தொகை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. இதில் 12 அணிகள் பங்கேற்கின்றன.
ஜூன் 12 ஆம் திகதி தொடங்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.