T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மகளிர் அணி தலைவியாக அதிக ஓட்டங்கள் குவித்து ஹர்மன்பிரீத் கவுர் சாதனை படைத்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த 3ஆவது T20 போட்டியில் 38 பந்துகளில் 66 ஓட்டங்களை எடுத்தபோது இந்த மைற்கல்லை அவர் அடைந்துள்ளார்.
ஒரு தலைவியாக 138 போட்டிகளில் விளையாடிய அவர் 3,017 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவற்றில் ஒரு சதம், 14 அரைச் சதங்கள் அடங்கும்.
இலங்கை அணியின் சமரி அத்தபத்து 108 போட்டிகளில் விளையாடி 3,016 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அவற்றில், 3 சதங்கள், 14 அரைச் சதங்கள் அடங்கும். இந்நிலையில் அவருடைய சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் முறியடித்து முன்னிலை பெற்றுள்ளார்.