23,457 Views
வத்தளையில் ஆடையகமொன்றின் முன் கொலைசெய்யப்பட்ட முஸ்லிம் யுவதியான பாத்திமா ருக்சானா இஸ்மி தான் கொலைசெய்யப்படுவதற்கு முன் தனக்கு இவ்வாறு நேர லாம் என தனது தாய்க்கு தெரிவித்துள்ளார்.
19 வயதான குறித்த யுவதி , தமிழ் இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் இரு வீட்டிலும் காதல் தொடர்புக்கு சம்மதிக்காத நிலையில் , குறித்த யுவதி காதல் தொடர்பை முறித்துக் கொள்ளும்படி அவ்விளைஞனுக்கு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த இளைஞன் யுவதியைக் குத்தி கொலைசெய்துள்ளதுடன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சம்பவம் இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது தாயாருக்கு அழைப்பை மேற்கொண்டுள்ள யுவதி தனது உயிர் எந்நேரத்திலும் பறிக்கப்படலாம் எனவும் தனது காதலன் தன்னை எந்நேரத்திலும் விட்டுப்போவப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக வேலையை விடப்போவதில்லையெனவும் ஆனால் தனக்கு பாதுகாப்பில்லையெனவும் தெரிவித்துள்ளார்.