Pungudutheevu murder of a girl - புங்குடுதீவில் மாணவி படுகொலை: 3 பேர் கைதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
6,610 Views
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவாண் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவி பாடசாலைக்கு சென்று திரும்பாத நிலையில், பெற்றோரினால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் அவர் பாடசாலைக்கும் சென்றிருக்கவில்லை.
இதனை அடுத்து சந்தேகம் கொண்ட பெற்றோரும் ஊர்மக்களும் தேடியதில், புங்குடுதீவில் உள்ள அவரது பாடசாலைக்கு அருகில் காணப்படும் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் இருந்து கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.