வெயில் வாட்டும் நேரத்தில் தாகம் தீர்க்கும் நீரை, சுத்தமாக, சுகாதாரமாக அருந்தவேண்டும் என்ற நோக்கில் நாம் அனைவருமே கைகளில் தண்ணீர் போத்தல்களுடன் திரியும் காலகட்டத்தில், உலகின் மிகப்பெரிய பணக்காரர் மனிதக் கழிவுகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைத் தான் அருந்துகிறார் என்பது ஆச்சரியம் தரும் விடயம் அல்லவா?
உலகின் ஒவ்வொரு உயிரினங்களின் நிலவுகைக்கும் மிக அவசியமானது தண்ணீர் . அதேவேளை அசுத்தம் அடைந்த நீரே உலகின் பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகின்றது ..இக்காரணியின் அடிப்படையில் நீரின் தூய்மை மனித மனங்களின் கருத்தியலில் முதன்மை பெறுகின்றது..
உங்களால் மனிதக்கழிவிலிருந்து பிரிவுகை செய்யப்பட்ட நீரினை பருகிட முடியுமா ? எவ்வளவு தான் நவீன தொழில்நுட்பங்களில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தாலும் இச்செயற்பாடு உங்களுக்கு கடினமானதாகவே இருக்கும்..ஆனாலும் இத்தகைய நீரையே உலகின் மிகப்பெரும் செல்வந்தரும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகருமான பில்கேட்ஸ் பருகுகின்றார் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
இவ்வுலகின் மிகப்பெரும் செல்வந்தர் இத்தகைய நீரினை பருகிடுவதற்கான காரணம் தான் என்ன ? இப்பத்தியை தொடர்ந்து வாசித்து அதன் காரணத்தை அறிந்திடுங்கள் .

அண்மையில் பில்கேட்சும் அவரது பாரியார் மிலிண்டாவும் இணைந்து பில் - மிலிண்டா நிதியம் எனும் பெயரிலான உலகினைக் காத்திடும் சேவை நல்கும் அமைப்பை ஆரம்பித்திருந்தார்கள்.உண்மையில் இவர்களது இத் திட்டம் புதியதோர் தொடக்கத்திற்கான மிகப்பெரும் புரட்சி.இத் திட்டத்திற்கு உதவிடும் கருவி "ஜான்ச்கி செயலியக்க கருவி" என அடையாளப்படுதப்படுகிறது..இக் கருவி கொண்டு மனிதக் கழிவிலிருந்து நீரினை பிரிவுகை செய்திடலாம் ...இவ் இயந்திரத்தின் செயற்பாடு பற்றி பில்கேட்ஸ் விபரிக்கையில் "குறித்த இயந்திரத்தின் செயற்பாட்டினை நேரில் அவதானித்துள்ளேன்... இக் கடத்தி வழியே பாரிய அளவிலான மலக்குவியல் கடத்தப்படும்.இம்மலக்குவியல் பல்வேறு பிரிகை செயன்முறைகளிற்கு உட்படுத்தப்படுகிறது ...சில நிமிடங்களின் பின் மிகச் சுத்தமான நீர் பெறப்படுகிறது...இந்நீரை பருகும் போது சாதாரண போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரின் சுவைக்கு ஒப்பானதாக உள்ளது ..இவ் நீரின் மனித நுகர்வு தொடர்பான பாதுகாப்பு ஆய்வரிக்கையினையும் படித்தறிந்தேன் ..அதன் பின் இப்போது தினமும் இந்நீரையே பருகுகின்றேன் " என்று பில்கேட்சே இந்த நீரிற்கு நற்சான்றிதழ் அளிக்கின்றார்
இவ்வியந்திரத்தின் இதர செயற்பாடுகளை அவதானிக்கையில் வியப்பளிக்கின்றது ..குறித்த இயந்திரம் மனிதக்கழிவிலிருந்து நீரினை பிரிவுகை செய்யும் அதே வேளை மின்சாரத்தினையும் உற்பத்தி செய்கிறது .இவ்வியந்திரதினால் 100,000 பேரினது மனிதக்கழிவிலிருந்து 86,000 லீட்டர் நீரினை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் அதே வேளை 250 கிலோவோட்ஸ் மின்சாரத்தையும் தினசரி உற்பத்தி செய்யலாம் ..உலகில் கோடிக்கணக்கானவர்கள் இன்னமும் எவ்வித அடிப்படை சுகாதார வசதியும் இன்றி வாழ்ந்து வருகின்றார்கள் .இதன் காரணமாகவே இத்தகைய முற்போக்கான நற்திட்டத்திற்கு தான் உதவுவதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்

உண்மையில் இவ்வாறு அடிப்படை சுகாதார வசதி இன்றி வாழ்வோரின் எண்ணிக்கை உலகில் 2 பில்லியனுக்கும் அதிகமாகும் .அத்தோடு முறையான வடிகால் அமைப்பு இல்லாத காரணத்தினாலும் நீர் பாரியளவு மாசுருகிறது .உலகில் வருடாந்தம் 700,000 குழந்தைகள் முறையான சுகாதார வசதி இன்மையால் உயிர் இழக்கின்றார்கள் .இதன் காரணமாகவே பில்கேட்ஸ் அவர்கள் இவ் முன்மாதிரி திட்டத்திற்கு உதவுகின்றார் .இது பற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் "மனிதக்கழிவினை முறையாகவும், பாதுகாப்பாகவும் அகற்றுகையில் இத்தகைய மரணங்களை தவிர்க்க முடிவதோடு ஏராளமான சிறுவர்களின் ஆரோக்கியத்தினையும் உறுதிப்படுத்த முடியும் " என்றார் .
இவ் ஆரம்ப பரிசோதனை முயற்சிக்கு பில்கேட்ஸ் அவர்கள் உதவி அளிப்பதோடு இத்திட்டம் முழுமையாக வெற்றி அளிக்கும் பட்சத்தில் உலகின் செல்வந்த தொழில் முனைவோர் இதற்கு முழுமையான ஆதரவினை நல்க வேண்டும் எனவும் அழைக்கின்றார் .உண்மையில் பில்கேட்சின் இவ் முயற்சி பாராட்டுதலுக்குரியது ..இம்முயற்சி முழுமையாக வெற்றி பெற்றால் மனிதக்கழிவினை பாதுகாப்பாய் அகற்றிட வழி ஏற்படுவதோடு நீர் தட்டுப்பாட்டிற்கும் ஓர் தீர்வு கிடைத்துவிடும்...இதனைத் தான் ஓர் முதுமொழி தெளிவாய் சொல்கிறது ஒருவனின் குப்பை இன்னுமோர் மனிதனிற்கு மிகப் பெரும் செல்வம் என்று ....
- கந்தசாமி சூர்யா