'
பாண்டிய நாடு' வெற்றி படத்திற்கு பின்னர் விஷால்- சுசீந்திரன் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'பாயும் புலி. முந்தைய படம் போலவே இந்த படமும் மதுரையை கதைக்களமாக கொண்டுள்ளதால் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மதுரையிலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று படப்பிடிப்புக்கு விடுமுறை என்பதால், விஷால் ,சுசீந்திரன், சூரி மற்றும் படக்குழுவினர் அனைவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து விஷால் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'பாயும் புலி படக்குழுவினர்களுடன் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்ததோடு புதிய உற்சாகத்தையும் கொடுத்துள்ளது' என்று கூறியுள்ளார்.
விஷாலுடன் முதல்முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேரும் 'பாயும் புலி' படத்தில் சூரி, சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், ஆனந்த்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை வேந்தர் மூவீஸ் தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் 17ல் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-கோடம்பாக்கக் குருவி-