11,650 Views
ரத்கம தேவபதிராஜ வித்தியாலத்தில் தரம் 11 இல் கல்வி கற்று வந்த இமேஸ் ஸ்ரீமால் த சில்வா என்ற 15 வயதான மாணவனையே பொலிஸார் தேடிவருகின்றனர்.
கடந்த 24 ஆம் திகதி குடிபோதையில் இருந்த நபரொருவரை இமேஸ் ஸ்ரீமால் கேளி செய்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த அந்நபர் குறித்த மாணவனை எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மாணவன் கல்வி பயிலும் பிரத்தியேக வகுப்பிற்கு சென்றும் முறைப்பாடு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த மாணவன் ஜிங் கங்கையில் குதித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள போதிலும் அம் மாணவன் நன்கு நீந்தக் கூடியவர் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தமது மகன் 6 மாதம் நீச்சல் பயிற்சி பெற்றவர் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.