பூமியின் மேற்பரப்பில் உள்ள பெருங்கடல்களை விட 3 மடங்கு அதிக நீர் பூமிக்கடியில் ஒழிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர் ஆழத்தில்,மேலடுக்கிற்கும் கீழடுக்கிற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த நீர்தேக்கம் உள்ளது.
ஆனால், இது நாம் பார்ப்பது போன்ற திரவ நிலையிலான கடல் அல்ல.ஒருவகை நீல நிறத் தாதுப் பாறைக்குள், ஒரு Sponge போல இந்த நீர் மூலக்கூறுகள் சிக்கியுள்ளன.
இந்த நீர் அனைத்தும் மேலே வந்திருந்தால், இமயமலை போன்ற உயரமான சிகரங்கள் மட்டும்தான் நிலமாகத் தெரிந்திருக்கும்.
மற்ற அனைத்தும் கடலுக்கு அடியில் போயிருக்கும்.
பல மில்லியன் ஆண்டுகளாகப் பெருங்கடல்களின் நீர் மட்டம் மாறாமல் இருப்பதற்குக் காரணம், இந்த நிலத்தடி நீர் தேக்கம் ஒரு சேமிப்புக் கிடங்கு போலச் செயற்படுவதுதான்.
நம் காலடியில் 700 கி.மீ ஆழத்தில் ஒரு பிரம்மாண்டமான நீர் உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
அதுதான் நாம் இன்று நிலத்தில் நடப்பதையும், கடல் மட்டம் சீராக இருப்பதையும் உறுதி செய்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.