சீனாவின் கன்சூ மாகாணத்தில் வயது குறைந்த பிள்ளைகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லீ யூ சூன் எனும் பெயர் கொண்ட முன்னாள் ஆரம்ப பாடசாலை ஆசிரியாரான இவருக்கு நேற்றைய தினம் மரணதண்டனை (28-05-2015) விதிக்கப்பட்டுள்ளது ..
கடந்த 2011 மற்றும் 2012 காலப்பகுதியில் 4 தொடக்கம் 11 வரையிலான வயதுகளைக்கொண்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுதியமைக்கு அமைவாக இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
இத் தீர்ப்பு தொடர்பாய் கருத்து தெரிவித்த சீன மக்கள் உயர் மன்றின் நீதிபதி, சமுகத்தில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தியதன் காரணமாக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் நாட்டில் அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த இத்தகைய தண்டனை அவசியமானது என்றும் குறிப்பிட்டார் ..
சீனாவில் 2012-2014 காலப்பகுதியில் சுமார் 7145 ற்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றினால் விசாரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது