மியன்மாரில் இருந்து தப்பிச் செல்லும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் உள்ளிட்ட ஆசிய சட்டவிரோத குடியேற்ற வாசிகள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.
இதன்பொருட்டு பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்குகொண்டுள்ளனர்.
மியன்மார் மாத்திரம் அன்றி பங்களாதேஸில் இருந்தும் அகதிகள் தப்பிச் சென்று தாய்லாந்து, இந்தோனேசிய மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.
இந்த நிலையில், இன்று இடம்பெறும் இந்த கலந்துரையடலில் இலங்கை உள்ளிட்ட 17 நாடுகள் பங்குகொண்டுள்ளன.
இதன்போது தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும்பாலும் பொருளாதார காரணங்கள் மற்றும் அடக்குமுறைகளில் இருந்து தப்பிச் செல்லும் அகதிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
புள்ளிவிபரங்களின் படி சுமார் 2600 அகதிகள் தற்போது கடல் பயணங்களின் நடுவே சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய தொடரின் போது தம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மியன்மார் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் தன்னை மாத்திரம் குற்றஞ்சாட்டுவது பொருத்தமானதல்ல என்ற விவாதத்தையும் முன்வைத்துள்ளது.
இதேவேளை ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தொடர்பில் எமது ஆய்வுக் கட்டுரை:
ரோஹிஞ்சா அகதிகள் விவகாரமும் மலேசிய மனிதப் புதைகுழிகளும் !!! மியான்மாரில் உண்மையில் இப்போது நடப்பது என்ன?