கிளிநொச்சி பனிச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 35 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பணத்தில் இருந்து கிளிநொச்சி சென்ற சொகுசு பேரூந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதிய நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, ஹப்புத்தளை பெரகலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.


