ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதியமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.
இதற்கமைய, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சராக விஜய தஹனாயக்க சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
எரிக் பிரசன்ன வீரவர்த்தன துறைமுக மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
சனத் ஜயசூரிய மாகாண சபை மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதியமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி பிரதியமைச்சராக திலங்க சுமதிபால சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.