இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள Once More திரைப்படத்தின் Teaser வெளியாகியுள்ளது.
தமிழில் ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ்.
தற்போது அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் உடன் இணைந்து ‘Once More ’ படத்தில் நடித்துள்ளார்.
‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களை தயாரித்த மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் first look போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில்
‘Once More’ படத்தின் Teaser ஐ படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.