Rally for Mahinda - மகிந்தவுக்கான மாத்தறை கூட்டம் : மகிந்தவும் பங்கேற்றார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,703 Views
மகிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மற்றுமொரு கூட்டம் நேற்று மாத்தறையில் இடம்பெற்றிருந்தது. இதில் மகிந்தராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும், எல்லாவல மேதாநந்த தேரர், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ்குணவர்தன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவர் வாசுதேவநாணயக்கார உள்ளிட்ட பலர் இதில் கலந்துக் கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும், மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டங்களில் பங்கேற்கும் சிறிலங்கா சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னர் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.