பெற்றோர் மற்றும் சகோதரியை கொலைசெய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியே வந்த சந்தேகநபரொருவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்து தாய், தந்தை மற்றும் சகோதரியை கொலை செய்த பிரதான சந்தேகநபரான அவர் மூன்று கோடிக்கும் அதிக பெறுமதியான 3 கிலோ ஹெரோயின் , சுமார் 24 இலட்சம் பணம் , மோட்டார் வாகனமொன்று , ஜூப் வண்டியொன்றுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ள அவர் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அவரை தொடர்ந்தும் பொலிஸார் கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் , அவர் வத்தளை பிரதேசத்துக்கு போதைப் பொருளை கட த்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் அவரை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் ஒரு இடத்தில் வைத்து அவர் போதைப் பொருளை ஒரு வாகனத்திலிருந்து வேறொரு வாகனத்துக்கு மாற்றும் போது பொலிஸார் கையும் களவுமாக கைதுசெய்துள்ளனர்.
தற்போது அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.