MSV Passed away - 'அழியாப்புகழுடல்' அடைந்தார் எம்.எஸ்.வி. - அழுகையோடு ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
3,763 Views
அண்மைக்காலமாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்த்திரையிசையின் "மெல்லிசைமன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன் என்றும் 'அழியாப்புகழுடல்' எய்தினார் என்ற செய்தி மெல்லிசை ரசிகர்களையும், திரையுலகினரையும் காலையிலேயே கண்கலங்க வைத்திருக்கின்றது. ஒரு காலத்தில் ஒலிப்பதிவுக்கூடத்திற்கும் வீட்டுக்குமாக மாறி மாறி ஓடிக்கொண்டிருந்த எம்.எஸ்.வி யின் வாழ்க்கைஇ சமீப காலத்தில் வீட்டுக்கும் வைத்தியசாலைக்குமென மாறிக்கொண்டது. அதற்குக் காரணம் 87வயதான அவரின் முதுமைக்காலம் என்பதோடு அவரை ஆட்கொண்ட சர்க்கரை நோயும் மிக முக்கிய பங்காக மாறியிருந்தது.
இந்தநிலையில்இ ஒரு சில மாதங்களாக சென்னை அடையாறிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஇ ஒரு சில வாரங்களாக அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு வைத்தியரின் கண்காணிப்பில் விசேட சிகிச்சை பெற்ற நிலையிலேயே இன்று காலை நிரந்தரத்துயில் அடைந்தார் மெல்லிசையின் மன்னர்.
இது இவ்வாறிருக்கஇ தமிழ்த்திரையிசையில் தனக்கென ஒரு தனித்துவ முத்திரை பதித்த இசையமைப்பாளராக வலம் வந்தவர்இ எல்லோராலும் எம்.எஸ்.வி என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் இந்த 'மெல்லிசை மன்னர்'. இசைஞானி இளையராஜாவின் வருகைக்கு முன்னர் தமிழ்த்திரையுலகில் ஓங்கி அடித்த இவரது மெல்லிசை அலைஇ இசைஞானிக்குப் பின்னர் வந்த இசைப்புயலின் வேகத்திலும் முழுமையாக அமைதியாகவில்லை என்பதே அவரின் பெருமை.