25,617 Views
அம்பலங்கொடை , ஊராவத்தை பிரதேசத்தில் 15 வயது பாடசாலை மாணவியொருவர் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று அதிகாலை டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த எயார் அரேபியா விமானத்தில் தப்பிச் செல்ல இருந்துள்ளார்.எனினும் விமானநிலையத்தில் வைத்து அவர் கைதாகியுள்ளார்.
டுபாயில் பணிபுரியும் அவர் 3 மாத விடுமுறையில் தாயகத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தோடு தொடர்புடைய பெண் உட்பட மேலும் நான்கு பேரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் மீட்டியாகொடையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.