Military in Civil Dress - வெள்ளை வேனில் சிவில் உடையில் ஆயுதங்களுடன் சிக்கிய இராணுவத்தினர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
6,652 Views
சாதாரண உடையில் கைதுப்பாக்கியுடன் வேனில் பயணித்த மூன்று இராணுவ வீரர்கள் நுகேகொட - மிரிஹான பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிரிஹானயில் இருந்து நுகேகொட - கம்சபஹா சந்தி வரை சென்று கொண்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இராணுவ வீரர்கள் பயணித்த வேனின் இலக்க தகடு தொடர்பில் பிரச்சினை நிலவுவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அவர்கள் மேஜர் ஜெனரால் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இராணுவ காவற்துறையிடம் அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த மூன்று இராணுவ வீரர்களும், நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.