7,738 Views
போக்குவரத்து பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டு , அவர்களது தலைக்கவசத்தை எடுத்துச் சென்ற பெண் தொடர்பில் அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
BMW காரில் வந்தமையால் அவர் 'BMW அக்கா' என சமூகவலைத்தளங்களிலும் பிரபலம் பெற்றார்.
பின்னர் அப்பெண் கைதுசெய்யப்பட்டு இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவ் வழக்கு விசாரணை நேற்று கடுவளை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட து.
இதன்போது அப் பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.