18,093 Views
பின்னர் அப்பெண் அடையாளங் காணப்பட்டதுடன் , இச்சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டிவி காணொளியும் வெளியானது.
இந்நிலையில் குறித்த பெண்ணின் தாயார் சில தகவல்களை வழங்கியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:
"எனது மகளின் கணவர் அவளை விட்டு வெளிநாடு சென்றார். இன்றைக்கு சுமார் 4 வருடங்களுக்கு மேலாக எனது மகன் , மானிப்பாயை சேர்ந்த கிருஷ்ணா என்பவருடன் தொடர்பிருந்தது. அவருடன் கொழும்பிலேயே வாழ்ந்து வந்தாள்.
எனது மகளின் சடலம் இருந்த பெட்டியை தூக்கிக் கொண்டு சென்றது கிருஷ்ணா என்பதை நான் படங்களில் இருந்து தெரிந்துகொண்டேன். அவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கொக்குவில்லைச் சேர்ந்த அருமை ராசா ரங்கன் என்பவரை திருமணம் செய்தார்.
அவர்களுக்கு பெண் பிள்ளை ஒன்று உள்ளது. இருவர் இடையேயும் பிரச்சினை இருந்த து. இதனால் இருவரும் பிரிந்தனர். பெண்பிள்ளையை கணவனின் உறவினர்களே வளர்க்கின்றனர்.
இன்றைக்கு ஒரு வருட த்துக்கு முன்னர் அவர் (கிருஷ்ணா) கொழும்புக்கு சென்றார். மகளுக்கும் வரச் சொன்னதால் அவரும் கொழும்புக்கு சென்றார். கிருஷ்ணா தொடர்பில் வேறெதுவும் தெரியாது. அவரின் முழுப் பெயர் கூடத் தெரியாது. மகள் எனக்கு கடைசியாக 28 ஆம் திகதி பேசினார். அது மகள் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர். அவர் தங்கச் சங்கிலியொன்றும் , மோதிரமொன்றையும் வாங்கியதாகச் சொன்னார். இப்போது பிரச்சினைகள் குறைவு எனவும் , தொந்தரவுகள் இன்றி வாழ்வதாகவும் தெரிவித்தார். பின்னர் 30 ஆம் திகதி காலையிலேயே மகளுக்கு இவ்வாறு நடந்துள்ளது என்பதை தெரிந்துகொண்டேன்" என்றார்.