பிலிமத்தலாவையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் பிரதான நபர் தனது மனைவியுடன் இத்தாலியில் வசித்து வந்துள்ளார்.
பின்னர் அவரது மனைவி பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் பொருட்டு இலங்கைக்கு வந்துள்ளார்.
இலங்கைக்கு வந்த அவரது மனைவி இங்கு 30 வயதான இளைஞர் ஒருவரோடு திருமணத்துக்கு அப்பாலான தொடர்பொன்றைப் பேணி வந்துள்ளார்.
இது தெரிந்த சந்தேகநபர் இலங்கைக்கு வந்து அவ்விளைஞனை தாக்கி , கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
பின்னர் அச் சந்தேகநபர் மீண்டும் இத்தாலிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சந்தேகநபரால் தாக்குதலுக்குள்ளானவரான , அவரின் மனைவியுடன் தொடர்பைப் பேணியவருமான இளைஞன் வெளிநாடு செல்ல இருந்துள்ளார்.
இதன்பின்னர் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்தே இக்கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
அவ்விளைஞனை கட த்திச் சென்று அவரின் கழுத்தை அறுத்து கம்பளை - நுவரெலியா வீதியில் ரம்பொடை மலையில் இருந்து கீழே வீசியுள்ளனர்.
எனினும் அவ்விளைஞன் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிழைத்துக்கொண்டுள்ளார்.
இதன்பின்னரே சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.